தஞ்சாவூர், மே.26: தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மூலம் சி மற்றும் டி பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிகளை சென்னை வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் (நதி பள்ளத்தாக்கு திட்டம்) சந்திரசேகர் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலமாக ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து ஜூன் மாதம் 12ம் தேதி நீர் திறந்துவிடப்படுவது வழக்கம் என்பதை கருத்தில் கொண்டு சென்னை வேளாண் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர் அறிவுரையின்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மிக துரிதமாக நடைபெற்று வருகின்றன.
