சென்னை: அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையில், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கேயம் தொகுதி MLA நடராஜன் இன்று அணி மாறியதால், இபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 27 ஆகவும், வேலுமணி ஆதரவு எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 20 ஆகவும் குறைந்துள்ளது.
