பதுக்கல் மது விற்றவர் கைது

 

நத்தம், மே 25: நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அரசு அனுமதி இன்றி மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது அதிகரித்து வருவதாக நத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் நத்தம் சுற்றுப்பகுதிகளில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோமணாம்பட்டி பகுதியில் உள்ள நாடக மேடை அருகே அதே பகுதியைச் சேர்ந்த சத்யபிரகாஷ் (28) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு ெசய்த போலீசார் சத்யபிரகாஷை கைது செய்தனர். அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories: