மாரியம்மன் கோயில் திருவிழா பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

 

பாடாலூர், மே 25: ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி, ஓம் சக்தி, பராசக்தி என்று கோஷம் எழுப்பி பரவசம் அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா மருதடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை பால்குடம் எடுத்தல் நிகழ்ச்சி மாரியம்மன் கோயில் முன்பு தொடங்கியது. அப்போது 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதியின் வழியாக மாரியம்மன் கோயிலுக்கு வந்தடைந்தனர்.

Related Stories: