பெரம்பலூரில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆய்வுக்கூட்டம்

 

பெரம்பலூர், மே 19: பெரம்பலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கப்படுவதை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும் என்று குடிநீர் விநியோகம் தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டத்தில் மாவட்டக் கலெக்டர் மிருணாளினி உத்தரவிட்டார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் மிருணாளினி தலைமையில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்வதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பான வாராந்திர ஆய்வுக்கூட்டம் நேற்று(18ஆம் தேதி) பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வழங்கப்படும் நீரின் அளவு எவ்வளவு, அதில் பொதுமக்களுக்கு வழங்கப் படும் குடிநீரின் அளவு என்ன, எவ்வளவு கால இடைவெளியில் குடிநீர் வழங்கப்படுகின்றது என்பது குறித்து விரிவாக மாவட்டக் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Related Stories: