கோவை: சிறுமி கொலை வழக்கில் கைதான கார்த்திக்கை ஜூன் 5 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி ஆணை விடுத்துள்ளார். போலீசார் கைது செய்தபோது தப்பிக்க முயன்ற கார்த்தி கீழே விழுந்ததில் காலில் முறிவு ஏற்பட்டுள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கார்த்தியிடம் நீதிபதி விசாரணை நடத்தினர்.
