சென்னை: கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கொடூரமான முறையில் படுகொலை செய்த மனிதநேயற்ற மிருகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் தனி கவனம் செலுத்த வேண்டும் என முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
