×

தமிழகத்தில் 17 இடங்களில் 100 டிகிரி வெயில்: நாடு முழுவதும் நாளுக்கு நாள் சுட்டெரிக்கும் வெயில்

சென்னை: கோடை வெப்பமானது தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் சுட்டெரிக்கிறது நேற்று 17 இடங்களில் 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக வேலூரில் 109 டிகிரி பாரன்ஹீட் பதிவானது. தமிழ்நாட்டில் நேற்று 17 இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியது.

திருத்தணி, மீனம்பாக்கம், ஈரோடு, நுங்கம்பாக்கம், திருச்சி, மதுரை என பல இடங்களில் வெயில் வாட்டி வதைத்துள்ளது. வரும் 25ம் தேதி வரை கடலோர தமிழகம், புதுகை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்றும் கணித்துள்ளது. தவிக்கும் கோடை வெப்பமானது நாடு முழுவதும் மக்களை வாட்டி வதைக்கிறது.

தவிக்கும் கோடை வெப்பமானது நாடு முழுவதும் மக்களை வாட்டி வதைக்கிறது. தலைநகர் டெல்லி, உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை சந்திக்கின்றனர். நேற்று நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசம் மாநிலம் பண்டாவில் 118 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் கொளுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கம்மம் பகுதியில் 115 டிகிரி மற்றும் தலை நகர் டெல்லியில் 113 டிகிரி என வெயில் சுட்டெரித்துள்ளது. டெல்லியில் தொடர்ந்து நான்காவது நாளாக வெப்ப அலை வீசிய நிலையில் அடுத்த 7 நாட்கள் வெப்ப அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Vellore ,Tiruttani ,
× RELATED சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240க்கு விற்பனை!!