தர்பங்கா: ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் நேற்று வீட்டிலிருந்து வௌியேறி ஆசிரமத்துக்கு குடிபெயர்ந்தார். தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கினார். கடந்த 2025ம் ஆண்டு ஆண்டு நடந்த பீகார் பேரவை தேர்தலில் 238 இடங்களில் போட்டியிட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனால் அவரது கட்சியினர் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். இதேபோல் பிரசாந்த் கிஷோரும் கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் நேற்று பாட்னாவில் உள்ள தனது வீட்டை விட்டு வௌியேறினார்.
தொடர்ந்து ஐஐடி பாட்னாவுக்கு அருகில் உள்ள பீகார் நவநிர்மான் ஆசிரமத்துக்கு குடிபெயர்ந்துள்ளார். தர்பங்காவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், பீகார் மக்கள் சாதி, மதம், பணம் ஆகியவற்றின் அடிப்படையில் வாக்களிக்காமல் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றி சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அடுத்த பேரவை தேர்தலில் கால்பதிக்கும் வரை என் கட்சியின் அரசியல் நடவடிக்கைகளை இந்த ஆசிரமத்தில் இருந்து தொடர்ந்து வழிநடத்துவேன் ்” என்றார்.
