- 2016 சட்டமன்றத் தேர்தல்
- புது தில்லி
- சென்னை உயர் நீதிமன்றம்
- திமுக
- அஇஅதிமுக
- இன்பதுரை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- Radhapuram
புதுடெல்லி: கடந்த 2016ம் ஆண்டு தமிழகத்தின் ராதாபுரம் தொகுதியில் அ.தி.மு.க.வின் இன்பதுரை வெற்றியை எதிர்த்து தி.மு.க.வின் அப்பாவு தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தபால் வாக்கு மற்றும் கடைசி நான்கு சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று உத்தரவிட்டது. இதையடுத்து இந்த உத்தரவை எதிர்த்து இன்பதுரை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட தடை விதித்தது. இதனைதொடர்ந்து அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.
இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறுகையில்,’இந்த விவகாரத்தை பொருத்தமட்டில் தற்போது வழக்கு தொடர்ந்த பிறகு இரண்டுமுறை சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதைத்தொடர்ந்தும் வழக்கு நிலுவையில் இருப்பது என்பது தேவையற்ற ஒன்றாகும். எனவே இந்த தேர்தல் வழக்கை உச்ச நீதிமன்றத்தில் முடித்து வைக்கிறோம்’ என்றனர்.
