×

கோவை அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி 2 பேர் கைது

கோவை: கோவை அருகே கருமத்தம்பட்டியில் உள்ள ஒரு கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கோவை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வடுகபாளையத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மற்றும் செங்காளியப்பன் ஆகியோர் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சி கொண்டிருந்தது தெரியவந்து உடனடியாக அவர்களை பிடித்து கைது செய்தனர் .மேலும் 20 லிட்டர் கேன்களில் பதுக்கி வைத்திருந்த கள்ளச்சாராயத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Coimbatore ,Coimbatore District Prohibition Enforcement Unit ,Karumathampatti ,Gopalakrishnan ,Chengaliyappan ,Vadugapalayam… ,
× RELATED சென்னையில் சிறுவர்களை வைத்து கஞ்சா விற்பனை.. நான்கு பேர் கைது