- எடப்பாடி
- சேலம்
- பொறியாளர்
- மிலானி
- பிறகு நான்
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- 2021 சட்டமன்றத் தேர்தல்கள்
- எடப்பாடி பழனிசாமி
சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி தேனியை சேர்ந்த இன்ஜினியர் மிலானி என்பவர் சேலம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு தடை ஆணை பெற்ற எடப்பாடி பழனிசாமி, வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அதில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதேநேரத்தில் இதற்கு பதில் அளித்த மிலானி, இந்த வழக்கை தனி நபர் வழக்காக நடத்தி கொள்ள அனுமதிக்குமாறு சுப்ரீம் கோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில், தங்களுக்கு 2 வார காலம் அவகாசம் வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர்களும் தமிழக அரசு வழக்கறிஞரும் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து நீதிபதிகள் 2 வார காலத்திற்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
