தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: 94.31% பேர் தேர்ச்சி

சென்னை: தமிழ்நாட்டில் 9 லட்சம் பேர் தேர்வெழுதிய பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். 9 லட்சம் பேர் எழுதிய 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 8,21,105 (94.31 சதவீதம்) பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 92.15 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 96.47 சதவீதம் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, results.digilocker.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

இதுதவிர, பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணிற்கும், தனித் தேர்வர்கள் தாங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணிற்கும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) வாயிலாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

Related Stories: