×

எட்டயபுரம் அருகே நின்றிருந்த லாரி மீது வேன் மோதி தம்பதி பரிதாப பலி: 15 பேர் படுகாயம்

 

எட்டயபுரம்: நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.  கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மலையாண்டிபட்டினத்தை சேர்ந்த காளிமுத்து (43) தலைமையில் 22 பேர், வேனில் நேற்று முன்தினம் இரவு திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்தனர். வேனை டிரைவர் சசிகுமார் ஓட்டினார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த தாப்பாத்தி – முத்துலாபுரம் வைப்பாறு பாலம் அருகே, நேற்று அதிகாலை வேன் சென்றபோது மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிருந்த கன்டெய்னர் லாரி மீது வேன் திடீரென மோதியது. இதில் வேன் முன் பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. வேனில் இருந்த விஜயன் (58), அவரது மனைவி கலைவாணி (53) ஆகியோர் பலியாகினர். டிரைவர் சசிகுமார் உள்பட 15 பேர் படுகாயமடைந்தனர்.

கோவில்பட்டி தீயணைப்பு துறையினர் வந்து வேனில் இடிபாடுகளில் சிக்கி தவித்தவர்களை மீட்டு தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மதுரை -தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்து காரணமாக இப்பகுதியில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : Ettayapuram ,Kalimuthu ,Malayandipattinam ,Pollachi ,Coimbatore ,
× RELATED தமிழ்நாட்டுக்கு தேவையான யூரியா,...