×

சென்னை திரும்பும் ஆளுநர் அர்லேகர்: தமிழக அமைச்சரவை விரைவில் விரிவாக்கம்

 

சென்னை: முதல்வர் விஜய்யும், 9 அமைச்சர்களும் கடந்த 10ம் தேதி பதவியேற்றனர். அமைச்சர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்க ப் பட்டன.எனினும், 22க்கும் மேற்பட்ட துறைகளுக்கு இதுவரை அமைச்சர்கள் நியமிக்கப்படாததால், பல்வேறு நிர்வாக நடவடிக்கைகள் தாமதமடைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. புதிய அமைச்சரவை பட்டியலில் தவெக முக்கிய எம்எல்ஏக்கள் இடம்பெற உள்ளதாகவும், அதேசமயம் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர், பொறுப்பு வழங்கப்படலாம் என தெரிகிறது. எஸ்.பி. வேலுமணி தரப்பினர் 12 அமைச்சர் பதவி வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

ஆனால் ேவலுமணி அணிக்கு 7 அமைச்சர் பதவி மற்றும் அமமுகஎம்எல்ஏவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேரளாவிலிருந்து இன்று சென்னை திரும்பும் ஆளுநர் அர்லேகர் நாளை அல்லது நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து இதுவரை எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.

Tags : Governor ,Arlekar ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,Vijay ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 40,000க்கும் மேற்பட்ட...