- சென்னை
- நீதிமன்றம்
- விஸ்வ ஹிந்து பரிஷத் வட தமிழ்
- தமிழ்நாடு
- ஜனாதிபதி
- பி. சொக்கலிங்கம்
- இந்து சமய அறநிலையத்துறை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: விஸ்வ இந்து பரிஷத் வட தமிழ்நாடு பிரிவு தலைவர் பி.சொக்கலிங்கம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துதல் என்ற பெயரில் 500 ரூபாய் வரை பணம் வசூலித்து சிறப்பு கட்டண தரிசன முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
பணத்தின் அடிப்படையில் பாரபட்சம் காட்டும் இந்த செயல்பாடு அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே, கோயில்களில் சிறப்பு கட்டண தரிசன முறையை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
