புதுவை: மே 20-ம் தேதி புதுச்சேரி மாநில திமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளனர். நாளை மறுநாள் மாலை 4 மணி அளவில் சித்தன்குடி ஜெயராம் திருமண மண்டபத்தில் செயற்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. ஜெகத்ரட்சகன் எம்.பி. தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் புதுச்சேரி மாநில திமுக நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
