மேற்கு வங்கத்தில் பசுக்களை ஏற்றிச் சென்ற லாரியை மடக்கிய பாஜக எம்.எல்.ஏ. ரேகா, ஓட்டுநரிடம் பசுக்களின் பிறப்பு சான்றிதழ் கேட்டதால் பரபரப்பு நிலவியது. “14 வயதுக்கு உட்பட்ட பசுக்களை இறைச்சிக்காக வெட்டக்கூடாது என பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே பசுக்களின் பிறப்புச் சான்றிதழை காட்டாவிட்டால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் மிரட்டியுள்ளார்.
