சர்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்றார் தாம்பரம் மாணவன்

தாம்பரம்: தாம்பரம், கடப்பேரி, மவுலானா நகர் பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் சண்முக பிரியன். இவர் நேபாளத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சர்வதேச சிலம்ப போட்டியில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றார். அவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

இந்த சர்வதேச சாதனையின் மூலம் தாம்பரம் பகுதிக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த மாணவன் சண்முக பிரியனை பாராட்டும் விதமாக தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் த.சரத்குமார் மாணவனை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்து சால்வை அணிவித்து, பூச்செண்டு கொடுத்து, வாழ்த்து தெரிவித்து அவரது சொந்த பணத்தில் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வு தாம்பரம் பகுதியில் உள்ள மாணவர்களிடையே விளையாட்டு மீதான ஆர்வத்தையும், சர்வதேச அளவில் சாதிக்க வேண்டும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளதாக சாதனை படைத்த மாணவன் தெரிவித்தார்.

Related Stories: