ரஷ்யா மீது 500 டிரோன்களை ஏவி உக்ரைன் பயங்கர தாக்குதல்: 4 பேர் பலி

 

கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் கடந்த 2022 பிப்ரவரி 22ம் தேதி தொடங்கிய நிலையில் நேற்றுடன் 1,544 நாள்கள் நிறைவடைந்து விட்டது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் பலமுறை முயன்றும் பலனளிக்கவில்லை. இதனால் இருநாடுகளும் தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு ரஷ்யா மீது உக்ரைன் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.

தலைநகர் மாஸ்கோவுக்கு வடமேற்கே உள்ள கிம்கி நகர் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் ஒரு பெண் கொல்லப்பட்டார். இதேபோல் மாஸ்கோவுக்கு வடக்கே உள்ள போகோரெல்கி கிராமம் மீது ஏவப்பட்ட டிரோன் தாக்கியதில் 2 ஆண்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.
இந்த தாக்குதல்களில் 12 பேர் காயமடைந்தனர். அதேசமயம், உக்ரைனின் 556 டிரோன்களை ரஷ்யா வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

Related Stories: