கட்டண விவரங்களை மாற்றி சென்னையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ரூ.2.2 கோடி மோசடி

 

கொழும்பு: சென்னையில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் ரூ.2.2 கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் நேற்று வௌியிட்ட அறிக்கையில், “சென்னையில் இயங்கி வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதித்துறையில் பணியாற்றிய சில ஊழியர்கள் இன்வாய்ஸ்கள், கட்டண விவரங்கள் மற்றும் கையொப்பங்களை மோசடியாக மாற்றி இந்திய மதிப்பில் ரூ.2.2 கோடி மதிப்பிலான பெரும் தொகையை கையாடல் செய்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய சட்ட அமலாக்கத்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும், இழந்த பணத்தை மீட்கும் முயற்சிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதேபோல், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் உள்ள ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவை வழங்குநர் ஒருவருக்கு செலுத்தப்பட வேண்டிய பணத்தை, மர்ம நபர் ஒருவர் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் கணக்கை சட்டவிரோதமாக பயன்படுத்தி, வங்கி கணக்கு விவரங்கள், ஆவணங்களை மாற்றியமைத்து, பணத்தை கையாடல் செய்துள்ளார். இதுதொடர்பாக ஐக்கிய அரபு அமீரக அமலாக்க அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளது.

Related Stories: