- தவெகா
- அஇஅதிமுக
- முன்னாள் அமைச்சர்
- OSManiyan
- வேதாரண்யம்
- முன்னாள்
- அமைச்சர்
- நாகப்பட்டினம்
- சிவ்சேனா கட்சி
வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நேற்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சிவசேனா கட்சி 2023ல் தொடர்ந்த வழக்கில் ஒரு கட்சியின் எம்எல்ஏக்களுக்காக கொறடாவை நியமிக்கும் அதிகாரம் அந்த கட்சியின் பொதுச்செயலாளருக்கு உள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அந்த வகையில், அதிமுக உறுப்பினர்களுக்கான கொறடாவை நியமிக்கும் அதிகாரம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குதான் உள்ளது. மேலும், அவர் நியமித்த கொறடாவின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் மீதும் கட்சி தாவல் விதிகளின்படி நடவடிக்கை உறுதி. அவர்களைமுதலமைச்சரே தனியாக சந்தித்த நிகழ்வு சாட்சியாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
