- தவேகா எம்.எல்.ஏ.
- மொடக்குரிச்சி
- சண்முகன்
- லக்காபுரம்
- சூரிய
- 46 புத்தூர்
- முத்துகுந்தன் பாளையம்
- சட்டமன்ற உறுப்பினர்
- டாஸ்மாக்
மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட லக்காபுரம், சோலார், 46 புதூர், முத்துக்கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றுமுன்தினம் தவெக எம்எல்ஏ சண்முகன் திறந்த காரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். லக்காபுரத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ சண்முகன், ‘‘டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது உள்பட இன்னும் பல மாற்றங்களை தமிழகம் பார்க்க உள்ளது’’ என தெரிவித்தார்.
அப்போது மதுபிரியர் ஒருவர், ‘‘மது கடையில் ரூ.10 கூடுதலாக வாங்குகிறார்கள். அதை நிறுத்த சொல்லி உத்தரவிட்டீர்களா?’’ என கேள்வி எழுப்பினார். அதற்கு எம்எல்ஏ சண்முகம், ‘‘இனி வாங்க மாட்டார்கள். எங்காவது கூடுதலாக ரூ.10 ரூபாய் வசூலித்தால் என்னிடம் சொல்லுங்கள்’’ என்றார். உடனே அந்த மதுபிரியர், ‘‘அருகில் இருக்கும் கடையில் ரூ.10 கூடுதலாக வாங்குகிறார்கள்.
என்னுடன் வாருங்கள் நான் காட்டுகிறேன்’’ எனக் கூறினார். இதை சற்றும் எதிர்பார்க்காக எம்எல்ஏ சண்முகன், ‘‘நான் மொடக்குறிச்சி தொகுதி அலுவலகத்தில் இருப்பேன். அங்கு வந்து இது பற்றி கூறுங்கள்’’ எனக்கூறி கூட்டத்தை பாதியில் முடித்துவிட்டு, ‘‘வண்டியை எடுங்கள். போகலாம்’’ என அங்கிருந்து சென்றார்.
