×

மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 இப்போது இல்லை: அமைச்சர் நிர்மல் குமார் கைவிரிப்பு

மதுரை: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது என்ற கேள்விக்கு அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்தார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், நேற்று காலை அமைச்சர் நிர்மல்குமார் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர், நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் ஒவ்வொரு நிமிடமும் எதை நினைத்து செயல்படுகிறாரோ, அதை நினைத்து அனைவரும் செயல்பட வேண்டும். இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் எல்லாம் சீராகி நல்ல முறையில் செல்லும்.

சட்டம், ஒழுங்கு சரியாக உள்ளது. அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது’’ என்றார். அப்போது, ‘‘மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 எப்போது வழங்கப்படும்’’ என நிருபர்கள் கேட்டதற்கு, ‘‘பெரிய அளவிலான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த பிறகு தான் செய்ய முடியும்.

அதற்குள் முதல்வர் நிதி ஆதாரங்களை சரி செய்வார். இவற்றை ஒரு அரசாணையில் செய்து விடமுடியாது. முதல்வர் விஜய் தேவையான நேரத்தில் செய்தியாளர்களை சந்திப்பார். செய்தியாளர்களை சந்திக்க வேண்டுமென்ற கட்டாயம் கிடையாது. அதற்கென பெஞ்ச் மார்க்கும் கிடையாது’’ என்றார். ‘‘ஜோதிடர் கூறியதால் தான் முதல்வர் கோட் சூட் அணிந்துள்ளாரா’’ என்ற கேள்விக்கு, ‘‘அது தலைவரின் முடிவு’’ என்றார்.

Tags : Minister ,Nirmal Kumar ,Madurai ,Meenakshi ,Amman Temple ,Nirmal Kumar Sami ,
× RELATED பெட்ரோல் – டீசல் விலை உயர்வு கண்டித்து...