ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி நாட்டுப்படகு மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு நாட்டுப்படகையும் 6 மீனவர்களையும் கைதுசெய்தது. 6 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மன்னார் தெற்கு கடற்பகுதியில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் ஆறு பேரும் நீர்கொழும்பு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
