×

பஞ்சாபில் அமலாக்கத்துறை சோதனை எதிரொலி; மாடியில் இருந்து மூட்டைகளில் வீசப்பட்ட 500 நோட்டுக்கள்

சண்டிகர்: நிலமோசடி வழக்கு தொடர்பாக பஞ்சாப் மற்றும் சண்டிகரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினார்கள். மொஹாலி மற்றும் சண்டிகரில் சமார் 12 இடங்களில் அதிரடியாக அமலாகத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நிதின் கோஹல் என்பவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. மேலும் பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மானின் சிறப்பு பணி அதிகாரியான ராஜ்பிர் குமான் உடன் கோகலுக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

இதனிடையே அமலாக்கத்துறை சோதனையின்போது மொஹாலியின் காரார் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் இருந்து 500ரூபாய் நோட்டுக்களால் நிரப்பப்பட்ட இரண்டு பைகள் குடியிருப்பில் இருந்து வெளியே வீசப்பட்டு கிடந்தது. இதில் இருந்த ரூபாய் கட்டுக்கள் அந்த பகுதியில் சிதறி கிடந்தன. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Enforcement Department ,Punjab ,Chandigarh ,Enforcement ,Mohali ,Nitin Gohal ,
× RELATED தேர்தல் தோல்விக்கு பிறகு...