- வாரணாசி-கொல்கத்தா விரைவுச்சாலை
- புது தில்லி
- இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்
- ஆணையத்திற்கு
- வாரணாசி
- உத்திரப்பிரதேசம்
- கொல்கத்தா
- மேற்கு வங்கம்
புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தின் வாரணாசியில் இருந்து மேற்கு வங்க மாநிலத்தின் கொல்கத்தா வரை 235 கிமீ நீளமுள்ள புதிய விரைவுச்சாலை அமைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. ரூ.9,250 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்காக மேற்கு வங்கத்தில் 250 ஏக்கருக்கும் அதிகமான பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலங்கள் தேவைப்படுகிறது.
மேலும், புலிகள் வசிக்கும் வனப்பகுதி, யானைகள் வழித்தடம் வழியாகவும் இந்த சாலை செல்கிறது. புரூலியா, பாங்குரா, மேற்கு மிட்னாப்பூர், ஹூக்களி மற்றும் ஹவுரா ஆகிய மாவட்டங்கள் வழியாக செல்லும் இந்த சாலைக்காக வனப்பகுதிகள் அல்லாத இடங்களில் 40 ஆயிரம் மரங்களையும், வனப்பகுதிகளில் 10 ஆயிரம் மரங்களையும் வெட்ட வேண்டியிருக்கும். இந்த விரைவுச்சாலை திட்டத்திற்கு ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியை தேசிய நெடுஞ்சாலை துறை கேட்டிருந்தது.
