கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்த அதிமுக மோகன்

 

பண்ருட்டி, மே 8: பண்ருட்டி நகராட்சி 24வது வார்டு கவுன்சிலராக பதவி வகித்து வந்தவர் மோகன். இவர் தற்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். விரைவில் சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்க உள்ள நிலையில், அவர் ஏற்கனவே பதவி வகித்து வந்த பண்ருட்டி நகராட்சி 24வது வார்டு கவுன்சிலர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதற்கான கடிதத்தை பண்ருட்டி நகராட்சி ஆணையர் காஞ்சனாவிடம் நேற்று காலை நேரில் வழங்கினார்.

Related Stories: