புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ராஜினாமா

 

புதுச்சேரி: புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேஜ கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் என்ஆர் காங்.,- 12, பாஜக-4, அதிமுக-1, லஜக-1 என 18 இடங்களில் தேஜ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மேலும், நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சுயேச்சை எம்எல்ஏ விக்னேஸ்வரன் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் தேஜ கூட்டணி பலம் 19 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் ரங்கசாமி 5 வது முறையாக முதல்வராக விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், 15வது சட்டப்பேரவை நேற்று கலைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதனை முதல்வர் ரங்கசாமி சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். கவர்னரை சந்தித்த பின் நிருபர்களிடம் முதல்வர் ரங்கசாமி கூறும்போது, ராஜினாமா கடிதத்தை கவர்னரிடம் வழங்கியுள்ளேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோருவேன். மேலும், தமிழ்நாட்டில் விஜய் ஆட்சி அமைக்க தனது வாழ்த்துகள் என்றார்.

Related Stories: