செங்கோட்டையன் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கோபி: கோபி அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வீடு உள்ளது. அதிமுகவில் இருந்த போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய போது, அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவர் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நடந்த சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்ட செங்கோட்டையன் வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு நேற்று முதல் மீண்டும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Related Stories: