கையில் மது பாட்டிலுடன் தஞ்சை தவெக எம்எல்ஏ போதையில் குத்தாட்டம்: வீடியோ வைரலால் பரபரப்பு

 

தஞ்சாவூர்: கையில் மது பாட்டிலுடன் தஞ்சை தவெக எம்எல்ஏ போதையில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி என 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. திமுக, அதிமுக, நாதக, தவெக போட்டியிட்டது. இதில் 6 தொகுதிகளை திமுக கைப்பற்றியது. 8 தொகுதிகளிலும் அதிமுக, நாதக படும் தோல்வியடைந்தது.

கும்பகோணம், தஞ்சாவூர் ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் தவெக வெற்றி பெற்றது. இதில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விஜய் சரவணன் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இந்நிலையில், விஜய் சரவணன் கையில் மதுபாட்டிலுடன் தம் அடித்த படி ‘தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுகுட்டி’ தான் என்ற பாடலுக்கு சிலருடன் குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Related Stories: