×

தமிழக தேர்தல் முடிவு: கர்நாடக முதல்வர் கவலை

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் கிடைத்த வெற்றியின் அளவு எதிர்பாராததாக இருந்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை பெரிதாக இல்லை. திமுக அரசின் நலத்திட்டங்கள் மக்கள் பாராட்டைப் பெற்றிருந்தன. வரலாற்று ரீதியாக பாஜவின் மதவாத அரசியலை நிராகரித்து வந்த தமிழ் வாக்காளர்கள், எப்போதும் விழிப்புணர்வுடன் வாக்களித்து வந்துள்ளனர்.

இளைஞர்கள் மற்றும் பெண்களில் சில பிரிவினர் நடிகர் விஜய்யின் கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டிருப்பது கவலையளிக்கிறது. திமுகவின் இந்தத் தோல்வி, திராவிட அரசியல் பாரம்பரியத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தப் பின்னடைவிலிருந்து மீண்டு வருவார் என்று நான் நம்புகிறேன். மேலும், விஜய்யின் இந்த முன்னோடியில்லாத வெற்றிக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Tags : Tamil Nadu ,Karnataka ,Chief Minister ,Bangalore ,Siddaramaiah ,Dimuka government ,Bajaj ,
× RELATED முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்!