×

ஜனநாயகத்திற்கான பாதை மிகவும் நீண்டது, கடினமானது: தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் கருத்து

புதுடெல்லி: 5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வௌியாகின. இதில் கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தன் எக்ஸ் பதிவில், “ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மையுடன் பணியாற்ற வாய்ப்பளித்த கேரள மக்களுக்கு கட்சி மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறது.

எங்கள் பொறுப்பை உணர்ந்து, கேரள மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின்படி பணியாற்றுவோம் என உறுதி அளிக்கிறோம். கேரளத்துக்கு பார்வையாளர்களை அனுப்பும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். மேலும், “கேரளாவை தவிர மற்ற மாநிலங்களில் வந்துள்ள தேர்தல் முடிவுகள் எங்கள் எதிர்பார்ப்பை விட மிகவும் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் நாங்கள் விரக்தி அடையவும் இல்லை. சோர்வடையவும் இல்லை.
நாங்கள் ஒரு கருத்தியல் போராட்டத்தை நடத்தி வருகிறோம்.

சர்வாதிகாரம் மற்றும் பொய்களுக்கு எதிரான ஜனநாயகம் மற்றும் உண்மைக்கான போராட்டத்தின் பாதை மாறதது, மிகவும் நீண்டது, கடினமானது. நாங்கள் தளராத மன உறுதியுடன் தொடர்ந்து முன்னேறுவோம். மேற்குவங்கம், அசாம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் தேர்தல் முடிவுகள் பற்றி காங்கிரஸ் விரிவான பகுப்பாய்வை விரைவில் மேற்கொள்ளும்” என கூறி உள்ளார்.

Tags : Congress ,New Delhi ,Kerala ,General Secretary ,Jairam Ramesh ,United Democratic Alliance ,
× RELATED முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் பினராயி விஜயன்!