×

சீரி ஏ கால்பந்து இன்டர் மிலன் சாம்பியன்

மிலன்: சீரி ஏ கால்பந்து போட்டியில் நேற்று, இன்டர் மிலன் அணி, பார்மா அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது. இத்தாலியில் முன்னணி அணிகள் மோதிய சீரி ஏ கால்பந்து போட்டிகள் நடந்து வந்தன. நேற்று நடந்த போட்டியில் இன்டர் மிலன் – பார்மா கால்சியோ அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் இன்டர் மிலன் அணி வீரர்கள் ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் போடுவதில் தீவிர முனைப்பு காட்டினர். போட்டியின் 45+1வது நிமிடத்தில் அந்த அணியின் மார்கஸ் துராம் அணியின் முதல் கோல் போட்டு கணக்கை துவக்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து, 80வது நிமிடத்தில் இன்டர் மிலன் அணியின் ஹெனிக் மிகிதர்யன் 2வது கோல் போட்டு அணியை வலுவாக்கினர். அதேசமயம் பார்மா அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட போட முடியவில்லை. அதனால், 2-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலன் அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 35 போட்டிகளில் இன்டர் மிலன் அணி 26 வெற்றிகளுடன் 82 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் தொடர்ந்து நீடித்தது.

நேபோலி அணி 35 போட்டிகளில் 21ல் வென்று 70 புள்ளிகளும் 2ம் இடத்தில் உள்ளது. இன்னும் 3 போட்டிகள் மீதமுள்ள நிலையில், எந்த அணியாலும், இன்டர் மிலன் அணியை மிஞ்ச முடியாத சூழல் காணப்பட்டதால், இன்டர் மிலன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சீரி ஏ கால்பந்து போட்டிகளில் இன்டர் மிலன் அணி 21வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று 2ம் இடத்தில் உள்ளது. அதேசமயம், ஜுவன்டஸ் அணி அதிகபட்சமாக 36 முறை இப்பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளது.

Tags : Serie A ,Inter Milan ,Milan ,Parma ,Italy ,Inter… ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி..!