×

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.15,600 கோடிக்கு விற்பனை

புதுடெல்லி: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, மிட்டல் குடும்பத்தினர், அடார் பூனவாலா உடன் சேர்ந்து ரூ. 15,600 கோடிக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல்லில் இடம்பெற்றுள்ள அணிகளில் ஒன்றான, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, பிரபல முதலீட்டாளர் கல் சோமானி வாங்கப்போவதாக கடந்த மார்ச் 21ம் தேதி செய்தி வெளியானது. ஆனால், பல்வேறு நிதிச்சிக்கல்கள் காரணமாக அந்த பரிவர்த்தனை நடைபெறாமல் போனது.

இந்நிலையில், மிட்டல் குடும்பத்தினரும், அடார் பூனவாலாவும் சேர்ந்து 15,600 கோடி ரூபாய்க்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய பரிவர்த்தனையின்படி, லட்சுமி மிட்டல், ஆதித்யா மிட்டல் குடும்பத்தினர் 75 சதவீத பங்குகளையும், அடார் பூனவாலா 18 சதவீத பங்குகளையும், மனோஜ் படாலே மற்றும் சிலர் 7 சதவீத பங்குகளையும் வாங்க உள்ளனர். முழு பரிவர்த்தனை விவரங்கள், 3வது காலாண்டு அறிக்கையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Rajasthan Royals ,New Delhi ,Mittal ,Adar Poonwala ,IPL ,Kal Somani ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி..!