×

லக்னோவுக்கு எதிரான போட்டி மும்பை அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் 47வது போட்டி மும்பை இந்தியன்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் இடையே, மும்பை வாங்கடே திடலில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து லக்னோ அணியின் துவக்க வீரர்களாக மிட்செல் மார்ஷ், ஜோஷ் இங்லீஸ் களமிறங்கினர். கஸன்பர் வீசிய 3வது ஓவரில் இங்லீஸ் (13 ரன்) ஆட்டமிழந்தார்.

அதன் பின் இணை சேர்ந்த மார்ஷ், நிகோலஸ் பூரன் இணை, மும்பை அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் மழை பொழிந்தது. இவர்கள் 94 ரன்கள் விளாசியிருந்த நிலையில், கோர்பின் பாஷ் வீசிய 9வது ஓவரில் பூரன் (21 பந்து, 8 சிக்சர், 1 பவுண்டரி, 63 ரன்) ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, அதே ஓவரில் மிட்செல் மார்ஷ் (25 பந்து, 44 ரன்) விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர், வில் ஜாக்ஸ் வீசிய 11வது ஓவரில் கேப்டன் ரிஷப் பண்ட் (15 ரன்) அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த அக்‌ஷத் ரகுவன்ஷியை (11 ரன்), ரகு சர்மா பந்து வீசி அவரே கேட்ச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். 20 ஓவர் முடிவில் லக்னோ அணி, 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் விளாசியது.

அந்த அணியின் அய்டன் மார்க்ரம் 31, ஹிம்மத் சிங் 40 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். மும்பை தரப்பில் கோர்பின்பாஷ் 2, கஸன்பர், வில் ஜாக்ஸ், ரகு சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து களம் இறங்கிய மும்பை அணி 18.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 229 ரன்களை எடுத்தது. இதன் மூலம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிப் பெற்றது.

Tags : Mumbai ,Lucknow ,IPL ,Mumbai Indians ,Lucknow Super Giants ,Wankhede Stadium ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி..!