×

ஐஎஸ்எல் கால்பந்து சென்னை-பஞ்சாப் நாளை மோதல்

லூதியானா: ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நாளை, சென்னையின் எப்சி, பஞ்சாப் எப்சி அணிகள் மோதவுள்ளன.  ஐஎஸ்எல் கால்பந்து போட்டிகள் நாட்டின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. லூதியானாவில் இன்று நடக்கும் போட்டியில் சென்னையின் எப்சி – பஞ்சாப் எப்சி அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் அணியுடன் சென்னை கடைசியாக மோதிய போட்டியில், 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி வாகை சூடியுள்ளது.

சென்னை அணி கடைசியாக மோதிய 5 போட்டிகளில் 2ல் வெற்றி, ஒன்றில் டிரா செய்துள்ளது. இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை வென்று புள்ளிகளை உயர்த்த சென்னையின் எப்சி முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளிப்பட்டியில் சென்னை அணி, 9 புள்ளிகளுடன் 12ம் இடத்திலும் பஞ்சாப் அணி 15 புள்ளிகளுடன் 9ம் இடத்திலும் உள்ளன.

 

Tags : ISL Football ,Chennai ,Punjab ,Ludhiana ,Chennai FC ,Punjab FC ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி..!