உடுமலை: உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோயில், பஞ்சலிங்க அருவி, திருமூர்த்தி அணை உள்ளிட்டவை உள்ளன. இவற்றை பார்க்க தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இதுதவிர, அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட்டதில் இருந்த திருமூர்த்திமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளது. ஞாயிற்றுக் கிழமையான நேற்று திருமூர்த்திமலைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர். ஆனால் அருவியில் குறைந்தளவே தண்ணீர் விழுந்ததால் ஏமாற்றமடைந்தனர். ஆனாலும் பாறைகளில் வடியும் நீரில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றனர்.
