சர்வதேச பத்திரிகையாளர் தினம்: பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து

 

சென்னை: சர்வதேச பத்திரிகையாளர் தினத்தையொட்டி பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஊடக சுதந்திரம் மீதான தாக்குதலை எதிர்த்தபோது உயிரிழந்த பத்திரிகையாளர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்நாள் உலகம் முழுதும் கடைபிடிக்கப்படுகிறது. பத்திரிகை சுதந்திரம் தான் நமது ஜனநாயகத்தை பிரதிபலிக்கக் கூடிய சுதந்திரமாக இருக்கும். ஊடக சுதந்திரத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது ஜனநாயகம் பாதிக்கப்படும். இதனால் ஒவ்வொரு குடிமகனின், சுதந்திரமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

உலக அளவில் உலக ஊடகவியல் சுதந்திரத் தரவரிசையில் கடந்த ஆண்டைவிட இந்தியா இந்த ஆண்டு சரிந்து உள்ளது என்று ரிப்போர்ட்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ் அறிக்கையில் தகவல் தெரியவருகிறது. தொடர்ந்து பல நாடுகள் முன்னிலையில் உள்ளன. இந்த சர்வதேச பத்திரிகையாளர்கள் சுதந்திர நாளில் நாம் ஒரு உறுதி ஏற்று, இந்தியாவில் ஊடகங்களுக்கு சுதந்திரம் அளித்து பத்திரிகையாளர்களை முழு சுதந்திரத்துடன் பணியாற்ற வழி செய்ய வேண்டும் என்பதனை இந்த சர்வதேச பத்திரிகையாளர் தினத்தில் நான் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Related Stories: