×

ராஜயோகம் தரும் நாம யோகம்

நாம யோகங்கள் என்றால் என்ன?

ஜோதிட சாஸ்திரத்தில் 27 நட்சத்திரங்கள் உள்ளது மாதிரி 27 நாம யோகங்களும் உள்ளன. இந்த யோகம் என்பது பஞ்சாங்கத்தின் நான்காவது அங்கமாகும் பஞ்சபூத தத்துவத்தில் இது ஆகாச தத்துவத்திற்கு உரியது.
யோகம் என்பது ஆகாயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் அதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து சூரியன் இருக்கும் தூரத்தையும், சந்திரன் இருக்கும் தூரத்தையும் கூட்டினால் வருவது இந்த யோகமாகும். இந்த யோகங்கள் மொத்தம் 27 ஆகும். இந்த யோகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் (நாமம்) இருப்பதால் இதை நாம யோகம் என்பார்கள்.

27 நாம யோகங்களின் பெயர்கள்

* விஷ்கம்பம்
* ப்ரீதி
* ஆயுஷ்மான்
* சௌபாக்யம்
* சோபனம்
* அதிகண்டம்
* சுகர்மம்
* திருதி
* சூலம்
* கண்டம்
* விருத்தி
* துருவம்
* வியாகாதம்
* ஹர்ஷனம்
* வஜ்ரம்
* சித்தி
* வியதீபாதம்
* வரீயான்
* பரீகம்
* சிவம்
* சித்தம்
* சாத்தியம்
* சுபம்
* சுப்பிரமம்
* பிராம்யம்
* ஐந்திரம்
* வைதிருதி
இவற்றில் விஷ்கம்பம் விஷ்கும்பம் எனவும் சுப்பிரமம், சுக்கிலம் எனவும் ஐந்திரம் மாஹேந்திரம் எனவும் அழைக்கப்படும்.

சுப நாம யோகங்கள்

ப்ரீதி, ஆயுஷ்மான், சௌபாக்கியம், சோபனம், சுகர்மம், விருத்தி, ஹர்சனம், சித்தி, வரியான், சிவம், சித்தம், சாத்தியம், சுபம், சுப்பிரமம், பிராம்யம், ஐந்திரம்.

அசுப நாம யோகங்கள்

விஷ்கம்பம், அதிகண்டம், திருதி, சூலம், கண்டம், துருவம், வியாகாதம், வியதீ பாதம், பரீகம், வைதிருதி.
இவற்றில் திருதி என்றால் பிடித்துக் கொள்ளுதல் உதவி துணை என்று பொருள்படும். இதை சுபயோகமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

யோகங்களும் நட்சத்திரங்களும்

யோகமும் நட்சத்திரமும் நிறைய ஒற்றுமைகளை கொண்டுள்ளன இரண்டுமே எண்ணிக்கையில் 27 ஆகும்.

நட்சத்திரத்தின் பாகை எங்கு ஆரம்பித்து முடிகிறதோ, அதே பாகையில் யோகம் ஆரம்பித்து முடிகிறது நட்சத்திரம், முதலில் அஸ்வினியில் ஆரம்பித்து ரேவதியில் முடிவடைவதுபோல யோகமும் முதலில் விஷ்கம்பத்தில் ஆரம்பித்து வைதிருதியில் முடிவடைகிறது.

ஒரு கிரகத்திற்கு மூன்று நட்சத்திரம் வீதம் பிரித்ததுபோல, நித்திய நாம யோகமும் பிரிக்கப்பட்டுள்ளது. வரிசை முறையில் நட்சத்திர நாதர்களுக்கு கொடுத்தது போலவே, கொடுக்கப்பட்டு அதாவது விம்சோத்தரி தசை வரிசைபோல கொடுக்கப்பட்டுள்ளது. நாம யோகத்தின் அதிபதிகள் பாவகிரகமான சனியில் ஆரம்பித்து சுபகிரகமான குருவில் முடிவடையும்.

நாம யோகத்தினால் என்ன பயன்?

ஒருவர் 27 நட்சத்திரங்களில் ஏதாவது ஒரு நட்சத்திரத்தில்தான் ஜனனம் ஆக முடியும். அதேபோன்று ஒரு மனிதன் 27 நாம யோகங்களில் ஏதாவது ஒரு நாம யோகத்தில்தான் பிறந்தாக வேண்டும். ஆதலால், நீங்கள் பிறந்த நாமயோகம் என்னவென்று முதலில் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உங்களுடைய ஜனன ஜாதகத்தில் பிறந்த கால குறிப்பு விவரங்களில் நீங்கள் பிறந்த நாமயோகத்தை குறிப்பிட்டிருப்பார்கள். தவிர, உங்களுடைய ஜனன கால விவரங்களை கணினியில் பதிவிட்டு உங்கள் ஜாதகத்தைப் பார்க்கும்போது அதில் நீங்கள் பிறந்த நாம யோகம் குறிக்கப்பட்டிருக்கும்.

உங்களுடைய பிறந்த நாம யோகத்தை தெரிந்து கொண்டபின், அதனுடைய யோகி, அவயோகி யார்? யோக அபயோக நட்சத்திரம் எது? என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.

பிறந்த ஜாதகத்தில் நல்ல யோகங்கள் இல்லாதவர்கள் இந்த நாம யோகத்தின் யோக கிரகம், அதிதேவதை தெரிந்துகொண்டு அதை இயக்குவதன் மூலம் வாழ்வில் உன்னத நிலையை அடையலாம்.

உங்களுடைய ஜனன யோகம் நடைபெறும் வேளையில் உங்களுடைய யோகத்தின் அதிதேவதைக்கு மலர் சாற்றி தீபம் ஏற்றி வழிபட்டால் நிச்சயம் யோகம் ஏற்படும்.

27 நாம யோகங்களுக்கு உரிய யோக கிரகங்கள் அதிதேவதைகள் தான பொருட்கள்

விஷ்கம்பம்
அதிதேவதை – யமன்
யோகி – சனி
தானம் – நவ தானியங்கள்
ப்ரீதி
அதிதேவதை – விஷ்ணு
யோகி – புதன்
தானம் – அன்னம்
ஆயுஷ்மான்
அதிதேவதை – சந்திரன்
யோகி – கேது
தானம் – நெய்
சௌபாக்யம்
அதிதேவதை – பிரம்மா
யோகி – சுக்கிரன்
தானம் – குங்குமம்
சோபனம்
அதிதேவதை – பிரகஸ்பதி
யோகி – சூரியன்
தானம் – ரவை
அதிகண்டம்
அதிதேவதை – சந்திரமா
யோகி – சந்திரன்
தானம் – வஸ்திரம்
சுகர்மம்
அதிதேவதை – இந்திரன்
யோகி – செவ்வாய்
தானம் – ரவை
திருதி
அதிதேவதை – ஜலம்
யோகி – ராகு
தானம் – வெள்ளி
சூலம்
அதிதேவதை – ஷர்ப்பம்
யோகி – குரு
தானம் – கிழங்குகள்.

Tags :
× RELATED இந்த வார விசேஷங்கள்