×

திருவோணம் அருகே கோவில் திருவிழாவில் ஒலிபெருக்கியை அகற்றக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

ஒரத்தநாடு : திருவோணம் அருகே கோவில் திருவிழாவில் ஒலி பெருக்கியை அகற்ற கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே உள்ள வெங்கரை ஊராட்சிக்குட்பட்ட இடையன்காடு கிராமத்தில் அமைந்திருக்கும் அய்யனார் கோவில் திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த கோயிலில் பொதுமக்கள் அனைவரும் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்து திருவிழா நடத்தி சாமி தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக இரு பிரிவினருக்கு இடையே கோவில் இட பிரச்சனை முற்றி திருவிழா தடைப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதில் ஒரு பிரிவினர் நீதிமன்றம் சென்று திருவிழா நடைபெறுவதற்கான உத்தரவு ஆணையை பெற்றுக் கொண்டு இடையன் காடு கிராமத்தில் உள்ள  அய்யனார்கோவில் திருவிழாவை நடத்தினர்.இதில் எதிர் ஒரு தரப்பினர் ஒலிபெருக்கி தங்களது பகுதியில் இருப்பதை அகற்றும் படி கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் வாட்டாத்திக்கோட்டை போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.திருவோணம் அருகே கோவில் இட பிரச்சினை காரணமாக திருவிழாவில் பிரச்சனை ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags : festival ,Thiruvonam ,Orathanadu ,Ayyanar temple festival ,Idayankadu ,Venkarai panchayat ,Thanjavur district ,
× RELATED நூல் விலை ரூ. 7 அதிகரிப்பு – நூற்பாலைகள் அறிவிப்பு