சென்னை: வணிக சிலிண்டர், விறகு கட்டைகள், மளிகை பொருட்கள் விலை உயர்வால் வரும் 5ம் தேதி முதல் சென்னையில் ஹாஸ்டல், PG வாடகை அதிகரிக்கப்பட்டுள்ளது. 4 பேர் தங்கும் ஹாஸ்டல் அறையின் கட்டணம் ரூ.6,500ல் இருந்து 7,500 ஆக உயர்வு. 3 பேர் தங்கும் ஹாஸ்டல் அறையின் கட்டணம் ரூ.7,000ல் இருந்து ரூ.8,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
