ஈரோடு பெருந்துறையில் ரூ.2.2 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை,மே 1: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் ரூ.2 கோடியே 2 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் போனது. பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் நேற்று கொப்பரை தேங்காய்கள் ஏலம் நடந்தது. ஏலத்திற்கு 1975 முதல் தர மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. இதில், கிலோ ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூ.139.09க்கும், அதிகபட்சமாக ரூ.146.11க்கும், சராசரி விலையாக ரூ.143.82க்கும் விற்பனை ஆனது. அதேபோல் 1087 2ம் தர மூட்டைகள் விற்பனைக்கு வந்தது.

இதில், குறைந்த பட்சமாக ரூ.93.59க்கும், அதிகபட்சமாக ரூ.140.99க்கும், சராசரியாக ரூ.134.39க்கும் விற்பனையானது. முதல் தரம் மற்றும் 2ம் தரம் என 3062 மூட்டைகளை கொண்ட 1 லட்சத்து 44 ஆயிரம் எடையுள்ள கொப்பரைகள் மொத்தம் ரூ.2 கோடியே 2 லட்சத்துக்கு விற்பனை நடந்தது.

 

Related Stories: