மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று போட்டியில் நம்பர்-1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில் உலகின் நம்பர்-1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர் 6-2, 7-5 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் கேமரூன் நோரியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இப்போட்டியில் மிக எளிதாக அவர் வென்றார்.
மற்றொரு போட்டியில் பிரான்சின் ஆர்தர் பில்ஸ் 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜென்டினாவின் தாமஸ் மார்டின் எட்செவரியை சாய்த்தார். செக் குடியரசின் ஜக்கூப் மென்சிக் 6-4, 6(11)-7(13) என ரஷ்யாவின் கரேன் கச்சனோவ்வை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார். மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலினா ரைபகினா 6(8)-7(10), 4-6 என்ற செட் கணக்கில் ஆஸ்திரியாவின் அனஸ்தேசியா பொடபோவாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். காலிறுதிக்கு முன்னேறிய அனஸ்தேசியா பொடபோவா, இன்று கரோலினா லிஸ்கோவாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.
