- சாண்ட்னர்
- கேஷவ் மகாராஜ்
- மும்பை
- மும்பை இந்தியர்கள்
- ஐபிஎல் கிரிக்கெட் தொடர்
- டோனி
- சென்னை சூப்பர் கிங்ஸ்
மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியில் காயமடைந்த சான்ட்னருக்கு பதிலாக கேசவ் மகராஜ் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து காயம் காரணமாக விளையாட முடியாத நிலையில் உள்ளனர். டோனி காயம் காரணமாக சென்னை சூப்பர்கிங்ஸ் அணியில் இதுவரை களமிறங்கவில்லை. தலையில் காயமடைந்த டெல்லி வீரர் லுங்கி நிகிடி சில போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வந்த நியூசிலாந்து வீரர் மிட்செல் சான்ட்னருக்கு, சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது இடது தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் இவர் சில வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய சூழல் பரிந்துரைக்கப்பட்டதால் தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், கேசவ் மகாராஜை அவரது அடிப்படை விலையான ரூ.75 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
