மதுரை திருமங்கலம் பகுதியில் மணல் கொள்ளையை தட்டி கேட்டவர் மீது தாக்குதல்

மதுரை: மதுரை திருமங்கலம் பகுதியில் மணல் கொள்ளையை தட்டிக் கேட்டவர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணல் கொள்ளை தொடர்பாக கள்ளிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்த அருண்குமார் என்பவரை, புகாரை திரும்ப பெறக்கோரி கலாநிதி என்பவர் மிரட்டியுள்ளார். இதனை தொடர்ந்து புகாரை திரும்பப் பெற்ற அருண், பின்னர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் அருண்குமார் மற்றும் அவரது உறவினர் மீது பட்டா கத்தி கொண்டு தாக்கியுள்ளது.

Related Stories: