பழநி: பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலின் கடந்த ஒரு மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நேற்று நடந்தது. இதில் ரொக்கமாக ரூ.4 கோடியே 62 லட்சத்து 27 ஆயிரத்து 739ம் தங்கம் 748 கிராம், வெள்ளி 12,893 கிராம், வெளிநாட்டு கரன்சி 1,448 ஆகியவையும் கிடைத்தது. பழநி கோயில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கை வரலாற்றில் ஒரே நாளில் கிடைத்த அதிகபட்சதொகை இதுவாகும். தொடர்ந்து இன்றும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடக்கிறது.
