×

விஜய் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்; ஜனநாயகன் படத்திற்கு எதிராக மக்கள் வீடுகளில் கருப்புக்கொடி: உண்மைக்கு மாறாக காட்சிகள் சித்தரித்ததாக புகார்

உசிலம்பட்டி: தவெக தலைவர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். கடந்த பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாக வேண்டிய இந்த திரைப்படம், தணிக்கை சான்றிதழ் பெற முடியாமல் போனதால் திரைக்கு வராமல் இருக்கிறது. இதற்கிடையே சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்பாக, இத்திரைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படத்தில் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த தேர்தல் தொடர்பான பிரச்னைகளை, உண்மைக்கு மாறாக சித்தரித்து காட்சிப்படுத்தியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பார்வர்ட் பிளாக் கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தில் பாப்பாபட்டி தேர்தல் தொடர்பான காட்சிகளை நீக்கக்கோரியும், படத்தின் இயக்குநர் வினோத் மற்றும் நடிகர் விஜய் பொது மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் பாப்பாபட்டி, பசுக்காரன்பட்டி, பேயம்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகளில் நேற்று கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தினர்.

Tags : Vijay ,Usilampatti ,Thaveka ,Pongal festival ,
× RELATED சட்ட விரோதமாக மணல் பதுக்கி...