ஆளுநர் மாளிகையில் மீண்டும் முதல்வர் குரல் ஒலிக்கும்: சேகர்பாபு உறுதி

பழநி: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று காலை, திண்டுக்கல் மாவட்டம் பழநி வந்தார். மலைக்கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்த அவர், கிரி வீதியிலுள்ள அழகுநாச்சியம்மன் கோயில், துர்க்கையம்மன், வன துர்க்கையம்மன், மகிஷாசுர வர்த்தினி அம்மன் கோயில், திருஆவினன்குடி கோயிலிலும் சுவாமி தரிசனம் செய்தார்.

பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஆளுநர் மாளிகையில் மீண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குரல் எதிரொலிக்கும். எஸ்ஐஆருக்கு பிறகு தற்போது நடந்து முடிந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீத உயர்வு குறித்து கேட்கிறீர்கள். கடந்த 2021 தேர்தலுடன் ஒப்பிட்டு பார்த்தால் அதுகுறித்து தெரியவரும்’’ என்றார்.

Related Stories: