மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக வீழ்ச்சி

 

மும்பை: மேற்காசியாவில் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பங்குச் சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் பங்குகளை அதிகம் விற்பதால் பங்குச் சந்தை குறியீட்டு எண்கள் 1.29% வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியப் பங்குச் சந்தைகள் சென்செக்ஸ், நிஃப்டி கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து, முதலீட்டாளர்களுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளன. போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு, மற்றும் அன்னிய முதலீட்டாளர்களின் வெளியேற்றம் ஆகியவை இந்த சரிவுக்கு முக்கிய காரணங்களாகும்

மேற்கு ஆசியாவில் இரண்டு வார கால போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், உலகளாவிய சந்தைகளின் ஏற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை சரிவு காரணமாக உள்நாட்டு சந்தையில் சாதகமான தாக்கம் ஏற்பட்டது. மேலும், ரெப்போ விகிதத்தை நிலையாக வைத்திருக்க ரிசர்வ் வங்கி எடுத்த முடிவு, அனைத்துத் துறைகளிலும் நடந்த அதிகப்படியான கொள்முதல் மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் வலிமை ஆகியவையும் முதலீட்டாளர்களின் மனநிலையை அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிந்து 76,664 புள்ளிகளில் வர்த்தகமாயின. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள், அடிப்படை கட்டமைப்புத் தொழில் நிறுவன பங்குகள் விலை குறைந்தன. இன்போசிஸ் பங்கு 7%, ஹெச்.சி.எல்.டெக். பங்கு 5.8%, டி.சி.எஸ். பங்கு 4.7%, டெக் மகிந்திரா பங்கு 4.4% விலை குறைந்தன.

சன் ஃபார்மா, ஏசியன் பெயின்ட்ஸ், ஐசிஐசிஐ, இண்டிகோ, ரிலையன்ஸ், மாருதி சுசூகி பங்குகளும் விலை குறைந்தன. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 275 புள்ளிகள் சரிந்து 23,898 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது. மும்பை சந்தையில் வர்த்தகமான 4,396 நிறுவன பங்குகளில் 2,905 நிறுவன பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாயின. 1,326 நிறுவன பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமான நிலையில் 165 நிறுவன பங்குகள் விலை மாற்றமின்றி முடிந்தன.

Related Stories: